முதுமையில் ஒரு காதல் – பாகம் 2 – Tamil Kamaveri
முதுமையில் ஒரு காதல்… பாகம் 2
அகிலனாகிய நான்…..
விமான நிலையம் வந்து அடைந்து எனது பெட்டி பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அதற்கு முன்னரே முரளிக்கு குறுஞ்செய்தி மூலம் நான் வந்தடைந்து விட்டேன் என்று அனுப்பி இருந்தேன். அவரும், தான் அங்கு வெளியில்தான் காத்திருப்பதாக பதில் அனுப்பி இருந்தார். அவரி நெருங்கியதும், என்னை லேசாக கட்டி அணைத்து வரவேற்றார். பிறகு அவரது கார் இருந்த இடம் நோக்கி சென்றோம். ஆனால் அவர் டிரைவர் அங்கு இல்லை. இம்முறை அவரே காரை ஒட்டி வந்ததாக சொன்னார். ட்ரைவரை தன் சொந்த வேலைக்கு பாவிக்க விரும்ப வில்லை, என்பதால் தான் மட்டும் வந்ததாக கூறினார்.
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அவர் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் இயற்கை கொஞ்சும் அழகினை ரசித்துக் கொண்டே சென்றேன். அப்படிப்பட்ட ஒரு இயற்கை அழகைப் பார்த்து நான் கொஞ்சம் ஆச்சர்யப் பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு அழகு தென் இந்தியாவில் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. அவர் வீட்டை வந்து அடைந்ததும் இன்னும் ஒரு பேரதிர்ச்சி எனக்கு.
நான் எதோ ஒரு கிராமத்தில் சினிமாவில் வரும் ஒரு பண்ணையார் வீடு போல தான் அவரது இல்லமும் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் அங்கு கண்டதோ என் கற்பனைக்கு எட்டாத ஒரு வீடு. எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. அதற்கு முன் முரளியை பற்றி ஒரு குறிப்பு இங்கு சொல்லியே ஆக வேண்டும். இளம் வயதில் அவர் இங்கிலாந்தில் படித்து அங்கேயே சில வருடம் வேலையும் செய்து இருக்கிறார். அதற்குப் பின்னரே அவர் ஊருக்கு திரும்பி வந்து திருமண வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
ஆட்டோ கேட்டை திறந்து கார் உள்ளே செல்லும் போதே எனக்கு ஒரு பெரிய பிரமிப்பு. எந்த ஒரு இடத்திலும் நான் மண்ணை பார்க்கவில்லை. சுற்று முற்று எங்கிலும் மரங்களும் செடிகளும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு நடப்பட்டு ஒரு பூங்கா போல தோன்றியது. காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினேன். வீட்டின் வெளிப்புறமே என்னை அங்கேயே சிரிது நேரம் நிறுத்தி விட்டது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு அழகிய சிறு பங்களாதான் அது. அந்த கட்டிட வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் ஆங்கிலேயர்களை ஞாபகப்படுத்தியது. மேலும் அவர் அந்த வீட்டை எவ்வளவு நேர்த்தியாக பராமரித்து வருகிறார் என்பது பார்த்த எவருக்கும் உடனே தெரிந்து விடும். உள்ளே சென்றதும் நான் கண்டது, அந்த வீடமைப்பின் உட்புறம். வரவேற்பறையிலிருந்து, சமயல் அறை வரை எல்லாமே சிறந்த முறையில் வடிவமைக்க பட்டிருந்ததன. அது வரை மௌனமாகவே இருந்தவர், திடீரென்று,
“என்ன சார், எதுவுமே பேச மாட்டறீங்க?” .
நானும் என் சுய நினைவுக்கு வந்தவனாய், “ஓன்னும் இல்ல, இப்படி ஒரு அதிர்ச்சியை நான் எதிர் பார்க்கவே இல்லை” .
“ஏன், இந்த மாதிரி ஒரு வீடு நீங்க பார்த்ததே இல்லையா?”.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, நிறையவே பார்த்தாச்சு, ஆனா தமிழ் நாட்டுல, அதுவும் இப்படி ஒரு இடத்துல, அதான் கொஞ்சம் பிரமிப்பாயிடுச்ச்சு”.
“சரி வாங்க”, என்று எனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறையில் உள்ள வசதிகளை எனக்கு விவரித்தார். நானும் ஒரு புன்முறுவலுடன், “தேங்க்ஸ் சார்”, என்றேன்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் காபி ரெடி பண்ணிடறேன்” என்றார்.
“காபி வேண்டாம், பால், சீனி இல்லாம டீ மட்டும் போதும்” என்றேன். சரி என்று அவர் வெளியே செல்ல, நானும் என் பெட்டியை திறந்து உள்ளிருந்த ஆடைகளை எடுத்து அலமாரியில் வைத்தேன். அவருக்கு வாங்கி வந்த பரிசு பொருள் ஒன்றை எடுத்து சிறிது நேரம் நோட்டம் விட்டேன். அப்பொழுதே கொடுக்கலாமா இல்லை நல்ல தருணதிற்கு காத்திருக்கலாமா என்ற ஒரு தயக்கம். பிறகு அதை எடுத்து வைத்து விட்டு, ஒரு சிறு குளியல் போட்டு விட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் அவர் தேனீருடன் எனக்காகக் காத்திருந்தார்.
இப்படியே நேரம் செல்ல செல்ல அவருடன் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் எனக்குள் ஒரு குதூகலத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்தது. இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி, மிகப் பெரிய ஒரு சந்தோஷம் கூடிய விரைவில் வரப் போகிறது போல் ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு வினோதமான போக்கோ இல்லை செயலோ வரவில்லை. அந்த காரணத்தினால் இதெல்லாம் என் மனப்பிரம்மை மட்டும் தானோ என்று ஒரு கேள்வியும் என்னுள்ளே இருந்து கொண்டே இருந்தது. எங்களுக்குள் ஏதாவது நடக்குமென்றால் அது எங்கு, எப்பொழுது, எப்படி, என்று தான் தெரிய வில்லை.
கதைகளில் நாம் நிறையவே படித்திருப்போம், ஆண்களோ சரி பெண்களோ சரி, பார்த்துப் பழகி சில நிமிடங்களுக்குள், செக்ஸ் வைத்துக் கொள்வது போல் சித்தரிப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது அப்படி நடப்பதில்லை, அது அவ்வளவு எளிதும் இல்லை. ஆனால் எப்போது நான் அவரை கட்டி அணைக்கும் அந்த சந்தர்ப்பம் வரும் என்று மட்டும் என் மனம் பதை பதைத்துக் கொண்டே இருந்தது. அப்படி அது நடக்கா விட்டாலும் சரி, அதை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்தையும் நான் எனக்குள் ஏற்படுத்தி கொண்டேன்.
பிறகு டீ அருந்த அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். நான் வாங்கி வந்த அந்த பரிசை அவருக்கு கொடுத்தேன்.
“என்ன சார் இதெல்லாம், இந்த வயசில இதெல்லாம் தேவையா?”
“இது அன்பின் அடையாளம், அன்புக்கு வயசு எல்லாம் தெரியாது, ப்ளீஸ், இந்தாங்க”.
அப்பரிசை கையில் எடுத்து, “இப்போதே பிரிக்கணுமா?”.
“உங்க இஷ்டம்”.
உண்மையில் எனக்கு என்ன வாங்க வேண்டும் என்று தெரியாமல் ஒரு தங்க சங்கிலியை வாங்கி வந்தேன். அதை பிரித்துப் பார்த்த அவர், சற்றே திகைத்தவராய், “ஏன் சார் இதெல்லாம்” என்று மறுபடியும் கேட்டார்.
“வேண்டாம்னா பரவாயில்லை, யாருக்காவது கொடுத்திடலாம்”.
“சரி சரி, நானே போட்டுக்கிறேன்” என்று, அச்சங்கிலியை அவர் கழுத்தில் போட முயற்சி செய்தார். ஆனால், அந்த கொக்கியை மாட்டுவதற்கு சற்று சிரமப்பட்டார்.
“நான் ஹெல்ப் பண்ணட்டா?”.
“ஹ்ஹ்ம்ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தார்.
நானும் அவர் அருகில் சென்று, அவர் பின் புறம் இருந்து அந்த கொக்கியை மாட்டி விட்டேன்.
அந்த ஒரு கணம், உரோமங்கள் அடர்ந்த அவர் கழுத்தின் மேல் என் கைகள் பட, என் உடல் முழுவதும் சிலிர்த்துக் கொண்டது. அவர் சட்டையில் உள்ள ஒரு பொத்தானைக் கழட்டி அந்த சங்கிலியை சரி செய்தார். அத்தருணம் அவர் மார்பின் அழகை லேசாக பார்க்கும் அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது, உண்மையிலே உறைந்து தான் போனேன். மறுபடியும் அவர் பட்டனை போட்ட போது நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன்.
பிறகு வெகு நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். அவர் எப்படி அந்த வீட்டை வாங்கி, அதை நிவர்த்தி செய்து, பராமரித்து வருகிறார் என்று தெளிவாக சொன்னார். வீட்டையும் நன்றாக எனக்கு சுற்றிக் காண்பித்தார். எனக்கு அப்பொழுதும் ஒரு விக்ஷயம் புரியவே இல்லை. எப்படி ஒரு வேஷ்டி சட்டை போட்ட 60 வயது இந்தியர், இப்படி ஒரு வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்? வீட்டிலேயே ஒரு நூலகமும் வைத்திருந்தார். அவரது வாழ்க்கை சூழல் எல்லாமே அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்து இருந்தது. இப்படிப் பட்ட ஒரு சூழலை தான் இவ்வளவு நாளாக நானும் தேடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு மன நிம்மதியான வாழ்க்கை இந்த வயதில் எவருக்குமே கிட்டாது.
“நீங்க ரொம்ப கொடுத்து வச்சவரு சார்”
“எதற்காக அப்படி சொல்லறீங்க?”
“இப்படி ஒரு அழகான இடம், தனியே எவ்வளவு சந்தோஷமா வாழ்க்கைய அனுபவிக்கறீங்க”.
“தனியா இருப்பது சந்ததோஷமான ஒரு விஷயம் தான் ஆனாலும், தனிமை என்று ஒன்று அவ்வப்போது வந்து எட்டி பார்க்கும் போது, இந்த வயசில அது கொஞ்சம் கஷ்டமான தான் இருக்கு. அதனால தான், புத்தகம், விவசாயம், தோட்டம் இப்படி அப்படின்னு நேரத்த செலவிடறேன்”.
மேலும் தொடர்ந்தார்.
“எல்லாமே இருக்கு, இருந்தாலும், ஆனா, அந்த தனிமைன்னு வரும் போது தான், நமக்குன்னு ஒருத்தர் இல்லயேன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். எல்லாம் இருந்தும், ஒரு மன விரக்தி எற்படும்”
இதை கேட்ட எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்ல. நான் நினைப்பதையே அவரும் நினைக்கிறாரோ என்று அவர் கண்களை சற்று உற்று நோக்கினேன். அவரும் என் கண்களை சற்று நோக்கி விட்டு சட்டென்று கீழே குணிந்து கொண்டார். அவரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தாமல், எனக்கு களைப்பாக இருப்பதால் கொஞ்ச நேரம் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன் என்றேன்.
அவரும் நேரம் போனதை உணர்ந்தவராய், என்னை ஓய்வு எடுக்க சொல்லி விட்டு மதிய உணவுக்கு என்னை எழுப்புகிறேன் என்று எனக்கு விடை கொடுத்தார். நானும் உடனே சென்று என் கட்டிலில் சாய்ந்தேன்.
தொடறும்…