கண்ணாமூச்சி ரே ரே – 62 – Tamil Kamaveri
Tamil Kamaveri – அந்த விஸ்தாரமான ஹாலின் மையத்தில் தொங்கிய இரண்டு ஊஞ்சல்களும்.. இப்போது ‘சர்ர்ர்ர்.. சர்ர்ர்ர்..’ என வேகவேகமாக ஆடிக்கொண்டிருந்தன.. ஒன்று ஆதிராவுடன்.. இன்னொன்று ஆளில்லாமல்..!! தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே ஊஞ்சலில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து கலகலவென சிரித்தவாறே.. ஜோடியாக ஊஞ்சலாடிய நினைவு ஆதிராவுக்கு இப்போது வந்தது..!! இருதயத்துக்குள் ஒரு இனம்புரியாத வலி பரவ, அவளது விழிகளில் ஒரு சொட்டு நீர் துளிர்த்தது..!! மனதில் இருந்த வேதனையை வெளியே காட்டிக்கொள்ளாமல்.. வேகமாக ஊஞ்சலாடிக்கொண்டே.. பக்கவாட்டில் திரும்பி அந்த ஆளில்லா ஊஞ்சலை பார்த்து.. இறுக்கமான குரலில் கேட்டாள்..!!
“எங்கடி வச்சிருக்குற அவரை..??”
“க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்…..!!!!!!”
“சொல்லுடி.. அவரை என்ன பண்ணின..??”
“க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்….. க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்…..!!!!!!”
“ப்ளீஸ் தாமிரா.. எங்கிட்ட அவரை குடுத்திடு..!!”
ஆதிரா கெஞ்சலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ஆளில்லாமல் ஆடிய அந்த ஊஞ்சல் அப்படியே ப்ரேக் போட்டமாதிரி அந்தரத்தில் நின்றது.. ஆதிரா ஆடிய ஊஞ்சல் மட்டும் இப்போது ‘க்க்க்கிர்ர்ர்ர்ர்ர். க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்..’ என்று ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது..!!
ஆதிராவும் இப்போது ஊஞ்சலில் இருந்து மெல்ல இறங்கினாள்.. அந்தரத்தில் நின்ற அந்த ஊஞ்சலையே சற்று மிரட்சியாக பார்த்தாள்..!! அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஊஞ்சல் சரசரவென சுழன்றது.. அப்படியே அந்தரத்திலேயே.. இரும்பு சங்கிலிகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்கிக்கொள்ள.. திடீரென்று அதன் அடிப்பக்க மரப்பலகை ஆதிராவின் முகத்தை நோக்கி சரேலென சுழன்றடித்தது..!!
“ஆஆஆஆஆஆ..!!”
பதறிப்போன ஆதிரா படாரென முகத்தை திருப்பிக்கொண்டாள்.. அரைநொடி தாமதித்திருந்தால் கூட அவளது முகம் பெயர்ந்து போயிருக்கும்..!! முகத்தை திருப்பி காயமுறாமல் தப்பித்த ஆதிரா.. தஸ்புஸ்சென மூச்சிரைத்தாள்..!! அவளது உடலில் ஒருவித வெடவெடப்பு.. அதேநேரம் மனதுக்குள் தங்கையின்மீது சுள்ளென்று ஒரு எரிச்சல்..!!
“ஏய்.. என்னடி நெனைச்சுட்டு இருக்குற உன் மனசுல..??” என்று ஏதோ ஒரு வெற்றிடத்தை பார்த்து கத்தினாள்.
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!”
வீட்டுக்குள் மீண்டும் அதே சிரிப்பொலி.. தூரத்தில் திடீரென ஒரு வெளிச்சம்.. சிவப்புத்துணியை போர்த்திக்கொண்டு தாமிரா ஓடுவது தெரிந்தது.. ‘ஜல்.. ஜல்.. ஜல்..’ என்ற கால்க்கொலுசின் ஓசையோடு..!!
“நில்லுடி.. நீ எங்க போனாலும் விடமாட்டேன்..!!”
ஆதிராவும் கத்திக்கொண்டு அந்த திசையில் ஓடினாள்.. ஐந்தாறு அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தூரத்தில் ஓடிய அந்த உருவம் பட்டென மறைந்துபோனது.. ஒரு பனிப்புகை மாதிரி..!! உடனே ஆதிரா சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள்.. உருவம் மறைந்துபோன இடத்தையே, மூச்சிரைக்கிற மார்புகளுடன் திகைப்பாக பார்த்தாள்..!!
“அக்காஆஆஆஆ…!!!!!!!!!!”
ஆதிராவுக்கு பின்புறம் இருந்து அந்த அமானுஷ்ய ஓலம்.. அதை கேட்கும்போதே அவளது ரத்த நாளங்களுக்குள் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!!
“ஹக்க்..!!”
மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு திரும்பி பார்த்தாள்..!! அந்த திசையில் யாரும் இல்லை.. வெண்கல சிலையில் அமர்ந்திருந்த காகம்தான், தனது அலகினால், சிறகின் அடிப்புறத்தை சுரண்டிக்கொண்டிருந்தது..!! தாமிராவின் குரல்மட்டும் இப்போது அந்த திசையில் இருந்து ஒலித்தது.. சற்றே அலறலாக.. ஒருவித ஏளன தொனியுடன்..!!
“புடிச்சுடுவியாக்கா என்னை..?? எங்க புடி பாக்கலாம்.. வா வா.. புடி புடி புடி புடி..!! ஹாஹாஹாஹாஹாஹா…!!”
பேச்சும் சிரிப்பும் கேட்டுக்கொண்டிருக்கையிலேயே.. இப்போது இன்னொரு திசையில், சற்று தூரமாக அந்த சிவப்பு அங்கி உருவம் தோன்றியது, திடுதிடுவென முதுகுகாட்டி ஓடியது.. ‘ஜலீர்.. ஜலீர்.. ஜலீர்..’ என்று அதே கொலுசு சப்தம்..!!
ஆதிரா அந்த திசையில் அடியெடுத்து வைக்க நினைக்கையிலேயே.. உருவம் சட்டென மறைந்து போனது.. மீண்டும் அவளுக்கு பின்னால் இருந்து தாமிராவின் குரல்.. சற்றே அலறலாக..!!
“கண்ணாமூச்சி ரே ரே..!!!!!!!!!”
‘ரே ரே.. ரே ரே.. ரே ரே..’ என்று அந்த பிரம்மாண்ட வீட்டின் சுவர்கள் அனைத்தும், தாமிராவின் குரலை எதிரொலித்தன..!! ஆதிரா மிரண்டு போனாள்.. உடம்புக்குள் ஒரு பயசிலிர்ப்பு சொடுக்கி விடப்பட்டிருக்க.. சப்தம் எதிரொலித்த சுவர்களை எல்லாம் வெடுக் வெடுக்கென திரும்பி பார்த்தாள்..!!
“கண்டுபுடி ரே ரே..!!!!!!!!!”
“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!!!” தாமிராவின் சிரிப்பு.. தண்டுவடத்தில் ஐஸ் கத்தியை இறக்குவது போலிருந்தது..!!
“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!” அவள் தொடர்ந்து பாட..
“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!” வீட்டுக்குள் தொடர்ந்து எதிரொலி..!!
காதுகளுக்குள் ரீங்காரமிட்டு, மூளைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது வீட்டுக்குள் ஒலித்த அந்த சப்தம்.. இடையிடையே ‘ஹாஹாஹாஹா’வென்று அவளது சிரிப்பொலி.. அதைத்தொடர்ந்து ஆங்காங்கே இருளுக்குள் தோன்றி ‘ஜல் ஜல் ஜல்’லென்று கொலுசொலிக்க ஓடினாள்.. ஆதிரா பயந்துபோய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே படார் படாரென காற்றில் மறைந்து போனாள்..!!
தங்கையை பிடிக்க அங்குமிங்கும் ஓடிக்களைத்த ஆதிரா.. இப்போது ஓய்ந்துபோய் ஓரிடத்தில் நிலைத்தாள்..!! விபத்தின்போது அவளுக்கு காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில் இப்போது ஒரு அதீத வலி.. வின்வின்னென்று உயிர்போனது.. வேதனையுடன் முகத்தை சுருக்கிக்கொண்டாள்..!! தங்கையுடன் போட்டியிட்டு வெல்வது கடினம் என்று அவளுக்கு புரிந்து போனது.. கண்களில் நீர்துளிர்க்க, இருட்டை பார்த்து கெஞ்சலாக கத்தினாள்..!!
“போதுண்டி.. வெளையாண்டது போதும்.. என்னால முடியல..!! ப்ளீஸ் தாமிரா.. என் முன்னாடி வா.. எனக்கு உன்கிட்ட பேசணும்..!!”
ஆதிரா கத்திமுடிக்க, இப்போது வீட்டுக்குள் மீண்டும் ஒரு அடர்த்தியான நிசப்தம் நிலவியது.. தாமிராவின் சிரிப்பொலியும், ஜ்ஜிலீரென்ற கொலுசொலியும் பட்டென நின்று போயிருந்தன..!!
ஆதிரா அந்த திடீர் அமைதியில் சற்றே குழம்பிப்போனவளாய்.. எதுவும் புரியாமல் வெற்றிடத்தை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..!! அவள் நின்றிருந்த இடம் கரியப்பியது போல இருட்டாயிருந்தது.. தூரத்தில்தான் மெழுகுவர்த்தியின் மசமச வெளிச்சம்..!! என்னவோ நடக்கப் போகிறது என்று படபடக்கிற இருதயத்துடன் அவள் காத்திருந்தபோதுதான்.. அடர்இருளுக்குள் இருந்து அந்த ஒற்றைக்கண் பார்வைக்கு வந்தது.. திரிதிரியாய் வழிகிற கூந்தல் மயிர்களுக்கு இடையில், ரத்தத்தில் முக்கியெடுத்தது போல செக்கச்சிவப்பாய் காட்சியளித்தது அந்தக்கண்..!!
“ஹ்ஹக்க்க்க்…!!!!”
மூச்சை இழுத்துப்பிடித்த ஆதிரா சற்றே அதிர்ந்துபோய் பின்வாங்கினாள்..!! இப்போது தாமிராவின் முகம் மெல்ல மெல்ல இருட்டுக்குள் இருந்து வெளிவந்தது.. நீண்டநாளாய் குளிர்நீருக்குள் ஊறிப்போனது போல வெள்ளைவெளேரென வெளிறிப்போயிருந்தது அந்த முகம்..!! முட்டையோட்டின் விரிசல் மாதிரி முகமும் உதடுகளும் பாளம் பாளமாய் வெடித்திருந்தன.. ஆங்காங்கே ஆழமாய் வெட்டுக்காயங்கள்.. அந்த காயங்களில் உறைந்து நிறம் வெளிறியிருந்த ரத்தச்சுவடு.. நெற்றிக்கருகில் வட்டமாய் உட்சென்ற ஒரு ஆழ்துளை..!! கண்களின் கருவிழி தவிர்த்து மிச்சமெல்லாம் அடர்சிவப்பு.. அந்தக்கண்கள் பார்த்த பார்வையிலோ அப்படியொரு கோபமும், கோரமும்..!!
தாமிராவின் உருவம் முழுத்தெளிவாக தோன்றவில்லை.. அவளைச்சுற்றி ஒரு புகைமண்டலம் சூழ்ந்தமாதிரி மங்கலாக.. கைகால்களும், கூந்தலும் காற்றில் மெலிதாக நெளிவது போல..!! ஆவியான தங்கையின் முகத்தை ஆதிரா இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறாள்.. தாமிராவின் உயிர்பிரிந்தபோது இந்தமாதிரித்தான் அவளது முகம் இருந்திருக்கவேண்டும் என்று தோன்றியது..!! அவளது முகத்தை பார்த்து ஆதிராவின் நெஞ்சுக்குள் பஹீரென்று ஒரு பயம் கிளம்பினாலும்.. அதையும் தாண்டி தங்கைமீது ஒரு பரிதாபமும், தன்மீது ஒரு சுயவெறுப்பும் பிறந்தன..!!
“ம்ம்ம்ம்ம்… ஸ்ஸ்..சொல்லு..!!!”
தாமிராவின் குரலில் ஒரு கரகரப்பு.. அவளது பேச்சை தொடர்ந்து ஒரு ஆவேசமூச்சு.. ‘உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்.. உஸ்ஸ்ஸ்..’ என்று..!! ஆதிராவுக்கு உடலும் கைவிரல்களும் வெடவெடக்க.. உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை எல்லாம் அடக்கிக்கொண்டு தைரியமான குரலில் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள்..!!
“எ..என் புருஷனை.. என் புருஷனை எங்கிட்ட குடுத்திடு..!!”
“ஹ்ஹ.. புருஷனா..?? நான் போட்ட பிச்சைன்னு சொல்லு..!!” தாமிரா கொக்கரித்தாள்.
“சரி.. பிச்சையாவே இருக்கட்டும்.. போட்ட பிச்சையை திரும்ப பிடுங்குறது பாவம் இல்லையா..??”
“ஹாஹாஹா.. பாவம் புண்ணியம் பத்திலாம் பேசக்கூட உனக்கு அருகதை இல்ல..!!”
“ஆமாம்.. அருகதை இல்லாதவதான்.. எனக்கே தெரியும்..!! உன்கிட்ட நான் அதிகாரமா கேட்கல.. கெஞ்சி கேக்குறேன்.. என் புருஷனை விட்டுடு.. அவர் எந்த தப்பும் செய்யல..!! உன் ஆத்திரத்தை தீத்துக்குறதுக்கு என்னை என்னவேனா செஞ்சுக்கோ.. என் உயிரை கூட எடுத்துக்கோ..!! ப்ளீஸ் தாமிரா.. அவரை மட்டும் விட்ரு..!!”
பேசப்பேசவே ஆதிராவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது.. அப்படியே தளர்ந்துபோய்.. கால்களும், உடலும் மடிந்துபோய்.. தரையில் அமர்ந்தாள்.. வாயைப் பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுதாள்..!!
ஒருசில வினாடிகள்.. தனக்குமுன் எந்த சலனமும், தங்கையிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.. மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தாள் ஆதிரா..!! தாமிராவின் உருவம் இப்போது மறைந்து போயிருந்தது..!! ஆதிரா உடனே அதிர்ந்துபோய் விருட்டென்று எழுந்து நின்றாள்.. அவளை சூழ்ந்திருந்த அடர் இருளைப் பார்த்து கத்தினாள்..!!
“தாமிராஆஆஆ.. தாமிராஆஆஆ..!!!!”
ஆதிரா கத்திக்கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் இப்போது தாமிராவின் குரல் கணீரென்று ஒலித்தது.. ஒரு பாடலைப்போல.. ஏற்ற இறக்கத்துடன்..!!
“ஈரேழு பதினாலு இறகு மயிலாட…”
“ஆட.. ஆட.. ஆட.. ஆட..” – வீட்டுச்சுவர்கள் அவளது பாடலை அப்படியே உள்வாங்கி எதிரொலித்தன..!!
“முந்நான்கு பனிரெண்டு முத்து மயிலாட..” – ஆதிரா மிரட்சியான விழிகளுடன் சுவர்களை சுற்றி சுற்றி பார்த்தாள்.
“ஆட.. ஆட.. ஆட.. ஆட..”
“வாராத பெண்களெல்லாம் வந்து விளையாட..”
“ஆட.. ஆட.. ஆட.. ஆட..”
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!” – நடுக்கம்கொள்ள வைக்கிற மாதிரி தாமிராவின் சிரிப்பொலி. அதைத்தொடர்ந்து,
“GGGGGame or SSSSShame..??” என்று அவளது கொக்கரிப்பு.
ஆட்டம் தொடங்கியாயிற்று என்று ஆதிராவுக்கு இப்போது புரிந்துபோனது.. ஆட்டத்தில் வென்றுமுடிக்க வேண்டும் என்று அவசரமாய் தன்மனதை திடப்படுத்திக் கொண்டாள்.. குரல்வந்த திசையைப் பார்த்து பதிலுக்கு அலறினாள்..!!
“Game…!!!!!!!!!”
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!”
ஒருபக்கம் தாமிரா சிரித்துக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் மூளையை கசக்கிய ஆதிரா ஓரிரு வினாடிகளிலேயே தங்கையின் விடுகதைக்கு விடையை கண்டுபிடித்தாள்.. உடனே பரபரப்பானாள்.. தங்கையும் தானும் முன்பு தங்கிக்கொள்கிற அறைக்கு ஓடினாள்..!! அறைக்குள் அடுக்கியிருந்த பொருட்களை சரசரவென தரையில் இழுத்துப்போட்டாள்.. எதையோ தேடினாள்..!!
அலமாரியின் கப்போர்டை திறக்க.. ‘க்க்கீச்ச்ச்..’ என்று கத்தியவாறு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது ஒரு வெள்ளை முயல்..!!
“ஆஆஆஆஆஆஆஆ…!!”
ஆதிராவின் அந்த பயமும் பதற்றமும் ஒற்றை வினாடிதான்.. அவசரமாய் சமாளித்துக்கொண்டு அந்த முயலை கண்டுகொள்ளாமல் கப்போர்டுக்குள் தேடினாள்.. அந்த பல்லாங்குழி பலகையை வெளியே எடுத்தாள்..!! மடித்து வைக்கப்பட்ட பலகையை விரிக்க.. உள்ளே இருந்து நழுவியது அந்த மஞ்சள் காகிதம்..!! தாமிரா இறந்த அன்று, ஆதிரா காட்டுக்குள் கசக்கியெறிந்த அதே காகிதம்.. ‘நீ எனக்கு வேணுண்டா’ என்று தாமிரா கிறுக்கி வைத்திருந்த அந்த காகிதத்தில், இப்போது வேறேதோ கிறுக்கி வைக்கப்பட்டிருந்தது.. புதையல் வேட்டையில் அடுத்த பொருளை கண்டறிவதற்கான குறிப்பு..!!
அவசரமாய் அதை வாசித்த ஆதிரா.. நெற்றியை சுருக்கி சிறிது யோசித்து.. பிறகு சற்றே முகம் பிரகாசமாகி..
“கண்ணாடி..!!”
என்று முனுமுனுத்தாள்.. அந்த அறையில் இருந்து விர்ரென கிளம்பினாள்.. கிளம்பியவள் என்ன நினைத்தாளோ.. சட்டென நின்றாள்.. மேஜை ட்ராவை இழுத்து, அந்த டார்ச்லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்..!! அறையை விட்டு வெளிப்பட.. தாமிராவின் குரல் வீட்டுக்குள் எங்கெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..!!
“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”
“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”
ஹாலுக்குள் பிரவேசித்தவள் பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. ‘ஹக்க்க்’ என்று திகைத்துப்போய் நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டாள்..!! வீட்டுக்குள் இப்போது ஆங்காங்கே வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும்..!! வெளியே ஓடிவந்த அந்த வெள்ளை முயல்.. அங்குமிங்கும் தவ்விக்கொண்டிருந்த சில அணில்கள்.. நாரைகள், கொக்குகள்.. கருப்புத் தோலும், சிவப்பு கண்களுமாய் பல்லிளித்த ஒரு பூனை.. சோபாவில் நின்று எச்சில் வடித்துக்கொண்டிருந்த ஒரு ஓநாய்.. உத்தரத்து சங்கிலியில் உடலை முறுக்கிக்கொண்டு, தலையை உயர்த்தி நாக்கு நீட்டிய மலைப்பாம்பு.. மேஜையில் படுத்து வாய்பிளந்து கொண்டிருந்த ஒரு காட்டுப்புலி.. இன்னும் இன்னும்..
“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!” – தாமிராவின் கேலிக் கெக்கலிப்பு.
மிருகங்களை பார்த்து ஒருகணம் மிரண்டுபோன ஆதிரா.. மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதும், படக்கென ஒரு தைரியம் பெற்றாள்..!!
‘இவையெல்லாம் தாமிராவின் சீண்டலே தவிர பயப்பட எதுவுமில்லை.. அவளுக்கு என்னுடன் விளையாடவேண்டும்.. அத்தனை சீக்கிரமாய் என் உயிரை பறித்துவிடமாட்டாள்..!!’
தைரியமுற்ற ஆதிரா தனது தேடுதலை தீவிரப்படுத்தினாள்.. அந்த வீட்டில் இருந்த அத்தனை கண்ணாடிகளிலும் டார்ச் அடித்து பார்த்தாள்.. எந்தக்குறிப்பும் கிடைக்கவில்லை.. மாடிப்படியேறி மேலே ஓடினாள்.. அவளது தலைக்குமேல் விர்ரென்று பறந்தன இரண்டு நாரைகள்..!! பின்னணியில் தாமிராவின் கேலிக்குரல்..!!
“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!” Koothi Nakkum Tamil Kamaveri Kathai
“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”
– தொடரும்
NEXT PART